• admin@mmkparty.com
  • +91 7200344576
  • Login | Register

ஈரோடு கிழக்கு தொகுதியில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பாக தனித்து நின்று போட்டுகிறது  என்பதை கழகத்தின் சார்பாக அறிவித்துக் கொள்கிறோம்.



வேட்பாளர் அறிமுக கூட்டம்


 தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்





ஈரோடு இடைத்தேர்தல் | மண்ணின் மைந்தர்கள் கழகம் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாக்கு சேகரிப்பு

காதலுக்காக பட குழுவினர் இயக்குனர் பெருமாள்ராஜ் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு பெற்றோம்



மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் Dr. A.S. செல்வராஜ் அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ்  அவர்களையும் மற்றும் கழக  பொறுப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்..













ண்ணின் மைந்தர்கள் கழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் அண்ணன் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் ஈரோடு தினசரி மார்க்கெட் மற்றும் வ. உ .சி பூங்காவிலும் பொது மக்களைச் சந்தித்துச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.



மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் அண்ணன் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள்  இன்று புனித அமல ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ  சர்ச் ஆகிய இடத்தில்  பொது மக்களைச் சந்தித்துச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் நிர்வாகிகளுக்கு சி.எஸ்.ஐ ஆயர் அவர்கள் ஆதரவு கூறினார்.


மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் அண்ணன் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் ஈரோடு பொது மக்களை சந்தித்து சிறப்பாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.



மண்ணின் மைந்தர்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆ.ச செல்வராஜ் அவர்களின் ஆணைக்கு இணங்க, தலைமைக் கழகத்தின் ஆலோசனைப்படி ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்து தனது பிரச்சாரத்தைத் துவக்கினார். ஈரோடு மாவட்ட அனைத்து வியாபார சங்கத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு வழங்கக் கோரி வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கினார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மண்ணின் மைந்தர் கழகத்தின் வேட்பாளர் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை ஆதரித்து கழகத்தின் நிறுவனத் தலைவர், இளைஞர்களின் போர்வாள், எழுச்சி பேச்சாளர் பாசமிகு அண்ணன் திரு ஆ சா செல்வராஜ் அவர்கள் மாநில நிர்வாகிகளுடன் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.


ஆதரிப்பீர் வாக்களிப்பீர் வெற்றி சின்னம் சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.


மண்ணின் மைந்தர்கள் கழக வேட்பாளார் திரு கே. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு எரிவாயு உருளை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்கினை செலுத்த வாக்கு பதிவு இயந்திரம் இரண்டில் உள்ள வரிசை எண் 28இல் உள்ள பொத்தான் அழுத்தவும்.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மற்றும் பிரசார  ஆலோசனை.

1) விசைத்தறித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைச் சரிசெய்ய மத்திய அரசுடன் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

2)ஈரோடு நகரில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலையும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

3)தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் காளிங்கராயன் கால்வாயில் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

4)ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் நீர் நிலைகளில் கலப்பதைத் தவிர்ப்போம் .

5)நகரில் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைக்கப்படும்.

6)புதை சாக்கடைத் திட்டப் பணிகள்  விரைந்து முடிக்கப்படும் .

7)சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைலிங் சுலபமாகத் தாக்கல் செய்ய இலவச ஆலோசனை சேவை மையம் அமைக்கப்படும்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மண்ணின் மைந்தர் கழகத்தின் வேட்பாளர் K. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம்.